ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | January 2025 Monthly Horoscope Kadagam

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (18:00 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:


ராசியில்  சந்திரன், செவ்வாய்(வ) -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது -  பஞசம  ஸ்தானத்தில் புதன் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன் -  களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சனி -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  - லாப  ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  ரண  ருண  ரோக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
 14.01.2025   அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று ராசியில் இருந்து செவ்வாய் பகவான் அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும்.

உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. அரசியல்துறையினருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:      4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்:            12, 13

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்