ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மேஷம்! | January 2025 Monthly Horoscope| Mesham | Aries Zodiac

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (19:21 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு (வ) -  சுக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப  ஸ்தானத்தில் சனி -  அயன சயன போக  ஸ்தானத்தில் ராஹூ  என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

01.01.2025  அன்று  புதன்  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  பாக்கிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

14.01.2025   அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

18.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 28.01.2025 அன்று லாப  ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடைவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும்.

மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகள் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணாக்கர்கள் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

அஸ்வினி:

இந்த மாதம் மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும்.

க்ருத்திகை:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்:      24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்:            6, 7

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்