சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருக்கும் முறை !!

Webdunia
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர் கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரி க்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். 

'சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.
 
விநாயகப்பெருமானே உன்னை நினைத்து  இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.
 
மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும் விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக  உட்கொள்வது சிறப்பு.
 
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர் கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்