பாத சனி காலத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்...!

Webdunia
ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகம், அவரது ராசிக்கு ‘2 ஆம்' வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில்  இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை ‘பாத சனி’ என்பார்கள்.

இந்த பாத சனி காலத்தில் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும், அதிகம் போருள் விரையம், உடல் நல பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வி அதிகம் ஏற்படும் காலமாக இது இருக்கும்.
 
பாத சனி காலத்தில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் கோவிலில் இருக்கும்  நவகிரக சந்நிதிக்கு சென்று சனி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வரவேண்டும். வழிபாடு முடிந்த பிறகு அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து, சிறிது  பணத்தையும் சேர்த்து தானமாக கொடுப்பது பாத சனி தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும். தினந்தோறும்  காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.
 
வீட்டில் நவகிரக் ஹோமம் செய்தால் சனி கிரகத்தின் பாதகமான நிலையால் ஏற்படக்கூடிய கடுமையான  பலன்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை  வழிபட்ட பின்பு “ஹனுமன் சாலிசா” படித்து வந்தாலும் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகள் அணிந்து வந்தால் சனி பகவானின் பரிபூரன ஆசிகள் கிடைக்கும்.
 
சனி பகவான் அர்தாஷ்டம சனி, கண்டசனி, அஷ்டமசனி, ஏழரை சனி (விரையசனி, ஜென்மசனி, பாதசனி) என  பல வகைகளில் நமக்கு தொல்லைகளை தருவார். என்றாலும் சனி போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும்  இல்லை என்ற பழமொழிக்கேற்ப சனி கொடுக்க ஆரம்பித்தால் அதை தடுக்க யாரும் இல்லை என்பதே உண்மை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்