திருஷ்டி நீங்க செய்யும் எளிய பரிகார முறைகள்....?

Webdunia
உங்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்கள், தீய சக்திகள் என அனைத்து விதமான பிரச்சனைகளை மிகவும் எளிய முறையில் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு பரிகாரங்கள் செய்யலாம்.
ஆரத்தி எடுக்க பயன்படுத்தும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவை கண்திருஷ்டியை விரட்டும் ஆற்றல் உண்டு. வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
 
எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவி வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை  மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
 
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை  பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டி கழியும்.
 
முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து  வீட்டில் தெளித்தால் தீய சக்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
 
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்