இன்றைய பிரதோஷம் விசேஷமானது ஏன் தெரியுமா....?

Webdunia
ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். 

பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். 
 
இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
 
சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நன்னாள் இன்றே ஆகும். மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனை வழிபடும் அற்புத நாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். சிவராத்திரியும், பிரதோஷமும் இணைந்து வருவது மிகவும் விசேஷம்... சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக்கூடியது.
 
இந்த அற்புதமான நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசிப்பது சிறப்பாகும். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல்லும், சிவபெருமானுக்கு வில்வமும் சாற்றி மனதாரப் பிரார்த்தனை செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்