அமாவாசை நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படுவதில்லை ஏன் தெரியுமா....?

Webdunia
ஆயுர்வேதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆயிர்வேதத்தைத் தாண்டி ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என கூறப்படுகிறது.

அதே சமயம் மருத்துவ ரீதியாக வெங்காயம் மற்றும் பூண்டு பல்வேறு நற்பலனைத் தருவதாக உள்ளது. ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு நாம் பூண்டு வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
 
மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
அமாவாசையின் திகதி முன்னோர்களுடன் தொடர்புடையது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுக்கு பிடித்த உனவை படையலிடலாம். அதே போல அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்ய வேண்டும்.
 
அமாவாசையில் மாலை நேரத்தில் தெற்கு திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இந்த நாளில் முன்னோர்கள் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்காகப் பூமிக்கு வருவதாக ஐதீகம். தென் திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் அவர் பாத பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்