குழந்தைகள் நன்றாக படிக்க சொல்லவேண்டிய சரஸ்வதி மந்திரம் எது தெரியுமா...?

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (15:19 IST)
உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதிக்கு வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.


மந்திர சுலோகம்:

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

இது சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம் இது. தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கற்க ஆரம்பிக்கிறேன் எனக்கு இந்த வித்தையை சித்திக்கச் செய் என்பது இதன் பொருள்!

சரஸ்வதி நமஸ்துப்யம் என்றால் சீரான எண்ணத்தை உண்டுபண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று பொருள். அடுத்த சொல் வரதே காமரூபிணி, சரஸ்வதி காமரூபிணி! இச்சை இல்லாமல் ஒரு செயல் நடைபெற முடியாது. ஆகவே வித்தையை கற்க விரும்புவனுக்கு வித்தை மேல் இச்சையை உண்டுபண்ணும் காமரூபிணி அவள்! வித்தை மேல் காமம் இருந்தால்தான் கற்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும்.

ஆகவே ஒருவன் தனது மனத்தில் எண்ண ஓட்டத்தை சீராக்கிக்கொண்டு, கற்கவேண்டும் என்ற இச்சையுடன் வித்தைய கற்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை இந்த சுலோகம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்