கடன் தொல்லை நீங்கி செல்வ வளம் பெருக பைரவர் வழிபாடு...!!

Webdunia
தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் அல்லது உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் காலையில் குளித்து விட்டு உணவேதும் அருந்தாமல் விரதமிருந்து, அருகில் உள்ள சிவாலயத்தில் ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். 

ராகு காலம் துவங்கியதும் பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் தொடுக்கபட்ட மாலையை சாற்றி விட்டு உங்கள்  வயதிற்கு ஏற்ற எண்ணிக்கையில் புதிய அகல் விளக்குகள் வாங்கி தீபமேற்றி வழிபட வேண்டும். 
 
உதாரணமாக: 25 வயதுடையோர் 25 புதிய அகல் விளக்குகள் வங்கி கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியால் தீபமேற்றி மனக்குறைகளை  பிரார்தனையாக அவர் முன் வைக்க வேண்டும். பின்னர் தயிர் சாதம், மிளகு சாதம் முதலானவற்றை படைத்து, அந்த பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கும். திருமண தடை நீங்கும். விரைவில் திருமணம் கைகூடும். பிரம்மஹத்தி தோசம்  விலகும். பைரவருக்கு அபிஷேகம் செய்யும் போது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியைப் பாடுவது நன்று.
 
தொடர்ந்து 12 மாதாந்திர நட்சத்திர நாட்கள் அல்லது 8 தேய்பிறை அஷ்டமி திதி நாட்கள் பூஜித்து வந்தால்,கடுமையான சிரமங்கள் நீங்கி வளமான வாழ்க்கையை பைரவப் பெருமான் அருளுவார். செவ்வாய்க்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய மிக சிறப்பான நாட்களாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்