வளர்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாட்டு சிறப்புகள் !!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (10:00 IST)
திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவ கை யான திதிகள் உள்ளன.  இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம்.  இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும்.  இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன.  இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை.  அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.
 
வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்டவேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.
 
நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள்.  இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும்.  
 
தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத்தொடங்கும்.  பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும்.  இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்