பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
சூரியன் உதயமாவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்ம தேவரின் நேரத்தை  குறிக்கின்றது.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஒரு வாரம் சிரமமாக இருந்தாலும் பிறகு  பழக்கமாகிவிடும். 
 
பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கொடுக்க காத்திருப்பார்கள். 
 
பிரார்த்தனைகள் பலிக்கும் அந்த நேரத்தை ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,  வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். 
 
உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழவேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது.
 
ப்ரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். மந்திர உபாசனைக்கு காலையில்  ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச்  செய்கின்றது.
 
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர  ஒலியானது வெளிப்படச் செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்