ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

Prasanth Karthick
சனி, 15 ஜூன் 2024 (11:45 IST)
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் சூர், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.




கிரகமாற்றம்:

ஆனி மாதம் 12ம் தேதி (26.06.2024) புதன்கிழமை அன்று ராசி ஸ்தானத்தில் இருந்து புத பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 23ம் தேதி (07.07.2024) புதன்கிழமை அன்று ராசி ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2024) வியாழக்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 32ம் தேதி (16.07.2024) செவ்வாய்கிழமை அன்று ராசி ஸ்தானத்தில் இருந்து சூர்ய பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்

எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுன ராசியினரே இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

திருவாதிரை:
உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய்; தேய்பிறை: வெள்ளி, சனி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்