திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்! – 9 நாட்கள் தாயார் வீதி உலா!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (16:45 IST)
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.



திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நாளை கொடியேற்றத்துடன் 9 நாட்கள் விழா தொடங்குகிறது.
பிரம்மோற்சவ நிகழ்வுகள்:

நவம்பர் 10 – காலை: த்வஜாரோஹணம், இரவு – சிம்ம சேஷ வாகனம்
நவம்பர் 11 – காலை: பெத்த சேஷ வாகனம், இரவு – ஹம்ச வாகனம்
நவம்பர் 12 – காலை முத்தையாபு பண்டிரி வாகனம், இரவு – சிம்ம வாகனம்
நவம்பர் 13 – காலை : கல்ப விருட்ச வாகனம், இரவு – ஹனுமந்த வாகனம்
நவம்பர் 14 – காலை: பல்லகி உற்சவம், இரவு – கஜ வாகனம்
நவம்பர் 15 – காலை: சர்வ பூபால வாகனம், இரவு – கருட வாகனம்
நவம்பர் 16 – காலை: சூர்யபிரபை, இரவு: சந்திரபிரபை
நபம்பர் 17 – காலை: தேரோட்டம், இரவு: அஸ்வ வாகனம்
நவம்பர் 18 – காலை: பஞ்சமி தீர்த்தம், இரவு: த்வஜாரோஹனம்

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்