பலமுறை உல்லாசத்திற்கு பிறகு ஏமாற்றிய காதலன்; புகார் அளித்த இளம்பெண் தற்கொலை

Webdunia
புதன், 24 மே 2017 (14:58 IST)
திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய காதலன் மீது போலீஸில் புகார் அளித்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.


 

 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஜெயதேவி என்ற இளம்பெண் தனது சகோதரிகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த கருணாநிதி என்பவருக்கும், ஜெயதேவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. 
 
இதையடுத்து கருணாநிதி, ஜெயதேவியிடம் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். ஜெயதேவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம் கூறியுள்ளார்.
 
ஆனால் கருணாநிதி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயதேவி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் கருணாநிதி மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில் ஜெயதேவி, தனது வாழ்க்கை நாசமாகிவிட்டது என தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறித்த சிதம்பரம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடித்தத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அடுத்த கட்டுரையில்