மேகி நூடுல்ஸில் பூச்சிகள் இருந்ததாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மேகி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்ததாக, நாளிதழ்களில் நேற்று செய்தி பரவியது. தற்போது அது உண்மை இல்லை என்று மேகி நிறுவனம் சார்ப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் இணையதளங்களில் வெளியானது. அதில் அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் காணொளி இடம்பெற்றிருந்தது. பிரபல நாளிதழ் ஒன்றில் கூட இதுகுறித்து தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அந்த பெண்ணின் காணொளி பேட்டி சிறிது நேரத்தில் இணையதளங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதனையடுத்துஅந்த நூடுல்ஸ் நிறுவனம், இத்தகைய செய்தி வெறும் வதந்தி என்றும், இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.