குரூப் 4 தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த பெண் மகளுடன் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (12:53 IST)
நேற்று குரூப்-4 தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த பெண் தனது மகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் பூங்கொடி. 25 வயதான இவர் தனது மகள் வர்ஷா உடன் தனது தாயாருடன் வசித்து வந்தார்
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பூங்கொடியின் கணவரும் நூற்பாலை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் வறுமையில் வாடி வந்தார்
 
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகிய பூங்கொடி நேற்று தேர்வு எழுதியதாக தெரிகிறது. தேர்வு எழுதி முடித்தவுடன் வீட்டுக்கு வந்த பூங்கொடி தனது மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து இரண்டு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வறுமை காரணமாக தாய் மகள் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்