இதையடுத்து நேற்றிரவு அடைக்கலத்தின் வீட்டுக்கு சென்ற அங்காள பரமேஸ்வரி அடைக்கலத்தோடு வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்ற அங்காளப் பரமேஸ்வரியைத் தாக்கியுள்ளார் அடைக்கலம். அந்த இடத்திலேயே அங்காள பரமேஸ்வரி உயிரிழந்தார். அங்காள பரமேஸ்வரியின் உடலை யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிலேயே எடுத்துச் சென்று போட்டுள்ளார் அடைக்கலம்.
திருமுருகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது மனைவி மூச்சு பேச்சற்று கிடந்ததை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்காள பரமேஸ்வரியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த மர்ம மரணம் குறித்து போலிஸ் நடத்திய விசாரணையில் அடைக்கலம் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.