நாகர்கோவில் கோட்டார் என்ற பகுதியில் உள்ள சலீம், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது வீட்டில் கொள்ளை அடிக்க கதவை உடைத்து உள்ளே திருடர்கள் நுழைந்ததை சிசிடிவி மூலம் பார்த்தார்.
வெளிநாட்டிலிருந்து சிசிடிவி மூலம் நேரலையில் கவனித்த சலீம், உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து விட்டதை தகவல் கொடுத்தார். உடனே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் "திருடன், திருடன்" என கூச்சலிட்டதால், திருட்டு முயற்சியில் இருந்து திருடர்கள் அதிர்ச்சி அடைந்து, பின் கதவு வழியாக தப்பி ஓடி உள்ளனர்.
இவை அனைத்தும் சிசிடிவி பதிவில் இருந்து தெளிவாக தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து சிசிடிவி பார்த்து சமயோசிதமாக தனது வீட்டில் உள்ள திருட்டை தடுத்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.