ஆனால் தீப்தி தனதுக் கள்ளக்காதலை நிறுத்துவதாக இல்லை. கணவனுக்குத் தெரியாமல் உத்தவ்வுடன் தனது காதலை தொடர்ந்துள்ளார். ஒருக் கட்டத்தில் தங்கள் காதலுக்கு தடையாக உள்ள பிரமோத்தைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். திட்டத்தின் படி தீப்தி, பிரமோத் குடிக்கும் தேநீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதைக் குடித்த பிரமோத்தும் வீட்டுக்குள்ளேயே இறந்துள்ளார்.
போலிஸ் விசாரணையில் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அந்த தேநீர் கப்பில் தானும் தேநீர் குடித்தது போலக் காட்டிக்கொள்ள தன்னுடைய உதட்டுச் சாயத்தைப் பூசியுள்ளார். மேலும் பிரமோத்தின் படுக்கைக்கு அருகில் நிறைய ஆணுறைகளை ஒளித்து வைத்துள்ளார். போலிஸ் விசாரித்தால் பிரமோத்துக்குப் பல பெண்கள் தொடர்பு இருந்ததாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாக சொல்லிவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.