இருமலுக்கு ஊசி… அரைமணிநேரத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:32 IST)
சென்னையில் இருமலுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண் ஒருவர் மயங்கி மரணமடைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னை, அனகாபுத்தூரைச் நித்யா என்ற இளம்பெண், கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். அவருக்கு நேற்று முன் தினம் தொடர் இருமல் ஏற்படவே வீட்டுக்கு அருகில் உள்ள கிளினிக்குக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர் இருமலுக்கான ஊசி போட்டுள்ளார்.

அந்த ஊசிபோட்டு வீட்டுக்கு வந்த சில நிமிடங்களிலேயே நித்யா மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மீண்டும் கிளினிக்குக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளார். உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கு நித்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து அரைமணிநேரம் ஆகிவிட்டதாக சொல்லியுள்ளனர்.

இதையடுத்து நித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிளினிக்கில் நித்யாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். வழக்கைப் பதிவு செய்துகொண்ட போலிஸார் மர்ம மரணம் சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்