மொத்த வாக்குகளை விட அதிகமாக பதிவான பூம்புகார்… மறு வாக்குப்பதிவு நடக்குமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:36 IST)
பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாடுதுறையில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

திருவாடுதுறை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தமே 578 வாக்குகள்தான் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பதிவு 628 ஆக இருந்துள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேட்பாளர்களின் முகவரகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்