சீரம் நிறுவனத்தின் புதிய தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு அனுமதி!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (08:27 IST)
சீரம் நிறுவனத்தின் புதிய தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் சீரம் நிறுவனம் இன்னொரு புதிய தடுப்பூசியை தயாரித்துள்ளது 
 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இந்த தடுப்பூசி சீரம் மற்றும் நோவோவாக்ஸ் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாக உருவாகியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு கோவோவாக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்