சங்கரமட பக்தர், பொருளாதார நிபுணர், சமூக ஆர்வலர்: உண்மையில் ராமசுப்பிரமணியன் யார்?

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (17:35 IST)
தொலைக்காட்சி விவாதங்களில் பல்வேறு அடையாளங்களில் பங்கேற்று கலக்கி வருபவர் ராமசுப்பிரமணியன். அவரது பல்வேறு அடையாளங்களை வைத்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வருகிறது.
 
சங்கரமட பக்தர், மோடி ஆதரவாளர், கல்வியாளர், சமூக ஆர்வளர், எழுத்தாளர், பாஜக, வழக்கறிஞர் என தினமும் ஒவ்வொரு அடையாளங்களில் பங்கேற்று வருகிறார் பேராசிரியர் ராமசுப்பிரமணியன்.
 
ஒவ்வொருநாளும் அவர் என்ன அடையாளத்தில் இன்று பேச வருகிறார் என்பதை கவனிக்க கூட ஒரு கூட்டம் உள்ளது. தனது தொலைக்காட்சி அடையாளங்களால் அந்த அளவுக்கு பிரபலமடைந்துள்ளார் அவர். அவரது அடையாளங்களை வைத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களுக்கு தோன்றுகிற அடையாளத்தை அவருடைய புகைப்படத்துக்கு கீழே போட்டு கலாய்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ராமசுப்பிரமணியன் யார்? அவருடைய உண்மையான அடையாளம் என்ன என்பதை பிரபல தமிழ் வார இதழின் இணையத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.
 
பொருளாதார நிபுணரான ராமசுப்பிரமணியன் பொருளாதாரப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஃபைனான்ஸ் மற்றும் கம்பெனி செகரட்டரியேட்ஷிப் படித்திருக்கிறார். கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஒரு பள்ளியின் தாளாளராக உள்ளார். நியூ காலேஜில் பேராசிரியராக சில காலம் பணியாற்றியிருக்கிறார்.
 
போஸ்ட் கிராஜுவேஷன் இன் லேபர் லா முடித்துள்ளார். 26 ஆண்டுகள் கார்ப்பரேட் செக்டாரில் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளார். ஒரு குழுமத்தின்கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கு மேனேஜிங் டைரக்டராக இருந்திருக்கிறார். இவர் எழுத்தாளரும் கூட, நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பங்குச்சந்தையிலும் இயங்கி வருகிறார் ராமசுப்பிரமணியன்.
 
இப்படி பல துறைகளில் தடம் பதித்ததால் தன்னை தொலைக்காட்சி விவாதங்களில் அழைப்பதாக அவர் கூறியுள்ளார். ராமசுப்பிரமணியன் தனது முதல் தொலைக்காட்சி விவாதத்தை 1997-ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் பொருளாதார நிபுணர் என்ற அடையாளத்துடன் ஆரம்பித்துள்ளார். ராமசுப்பிரமணியனுக்கு பல அடையாளங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர் விரும்புவது பொருளாதார நிபுணர் என்ற அடையாளத்தைதான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்