தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சியும், அதிமுக கட்சியும் முழுவதும் சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தின் கைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தாலும் கட்சி தலைமை சசிகலா சொல்வது தான் நடக்கும் என்கிறார்கள்.
மேலும் சசிகலாவின் கணவர் நடராஜன் தான் பின்னால் இருந்து அவரை இயக்குவதாக பேசப்பட்டது. மேலும் அவரது தம்பி திவாகரன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் முக்கியமான நபராக மாறியுள்ளனர். அதிமுகவில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது என்ற பேச்சு வர ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தல் குடும்ப அரசியல் செய்பவர்களைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று அவர் பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன் ஜெயலலிதா முதல்வராக பாடுபட்டது நான்தான் என்றார். மேலும் எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தது. நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்.
நாங்க குடும்ப ஆட்சிதான் பண்ணுவோம். என்ன பண்ணுவீங்க? நாங்கதான் ஜெயலலிதாவைக் காப்பாற்றினோம். ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்றும் நடராஜன் கூறினார்.