''பாஜகவினருக்கு வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாழ்வா சாவா என்ற தேர்தல். அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்'' என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் கொள்கை திருவிழாவாக கொண்டாட வேண்டும். பாஜகவினரை பொறுத்தவரை இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல்.அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.