பஸ் மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி… பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய உறவினர்கள்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:42 IST)
விழுப்புரம் அருகே விபத்து ஒன்றில் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுனர் பலியானார்.

விழுப்புரம் பகுதியில் உள்ள சவிதா தியேட்டர் அருகே புதுச்சேரியில் இருந்து வந்த தனியார் பேருந்து மோதி அர்ஜுனன் என்ற ஆட்டோ ஓட்டுனர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பயந்துபோன பேருந்து ஓட்டுனர் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்மந்தப்பட்ட இடத்துக்கு வந்த அர்ஜுனனின் உறவினர்கள் கோபத்தில் பேருந்தை அடித்து நொறுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். மேலும் அர்ஜுனனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுனரை கைது செய்வதாக அறிவித்து அவர்களைக் கலைந்து போக செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்