விஜயபாஸ்கருக்கு மீண்டும் "லக்கு"

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (10:29 IST)
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
 

 
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டச் செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
சட்டசபை தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வலதுகாலை எடுத்துவைத்தவருக்கு, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் பதவி கொடுத்தார். தற்போது, கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதால், அதிமுகவில் அதிர்ஷ்டசாலி லிஸ்ட்டில் விஜயபாஸ்கரும் இணைந்துள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்