விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (22:30 IST)
விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா. அதிமுக, திமுக என மாறி மாறி கட்சியில் இருக்கும் இவர் இந்த படத்தில் நடித்த கேரக்டர் யாரை குறிக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதமே நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் பழ.கருப்பையா அளித்த பேட்டி ஒன்றில், 'சர்கார் படத்தின் போது விஜய் என்னிடம் நிறைய விஷயங்களை பேசினார் என்றும், அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், தன் மீது அன்பு வைத்துள்ள மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல சிந்தனை கொண்டவர் என்று கூறிய பழ.கருப்பையா விஜய் காலம் தாழ்த்தாமல் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பழ.கருப்பையாவின் இந்த பேட்டியில் இருந்து விஜய் நிச்சயம் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்