ரௌடி கும்பலோடு தொடர்பு… நண்பனையும் சேர்க்க முயற்சி – மறுத்ததால் கொலை செய்த மாணவன் !

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (08:58 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மகேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் பல உண்மைகளை கைதான விஜய் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், நேற்று அவரது நண்பர் விஜய் வீட்டில் சுடப்பட்டார். தலையில் குண்டடி பட்ட முகேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்மந்தமான முதல் கட்ட விசாரணையில் பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவரிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து தலைமறைவாகியிருந்த விஜய் போலிஸில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில்  பெருமாட்டுநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ரவுடி செல்வம் தலைமையிலான கும்பலில் விஜய் இருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைக் கேட்ட போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்