அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ஏதோ ஒரு உண்மையை மக்களிடம் இருந்து மறைக்கிறார். அந்த உண்மையை அவர் வெளியே சொன்னால் பலபேர் அவமானப்பட வேண்டியிருக்கும் என அவரே கூறியுள்ளார்.
தினகரனின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் பெரும்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல். சமீப காலமாக இவர் தினகரனை எதிர்ப்பவர்களையும், அவருக்கு எதிராக கருத்து சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கிட்டத்தட்ட தினகரனின் குரலாக ஊடகங்கள் முன்னிலையில் பேசி வருகிறார் வெற்றிவேல்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்எல்ஏ, பிரதமர் மோடி தம்பிதுரை மூலமாக சசிகலாவிடம் ஆதரவு கேட்டார். தம்பிதுரை சசிகலாவை சந்தித்தார். அதன் பின்னர் தம்பிதுரை ஓபிஎஸ்-ஐயும், எடப்பாடியையும் தொடர்பு கொண்டார். சசிகலா அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுங்கள் என்றார்.
மேலும் சில விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன். உண்மையை நான் கூறினால் பல பேர் அவமானப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஓரளவுக்கு மேல் என்னால் பொறுமை காத்து அனைத்தையும் மறைக்க முடியாது என வெற்றிவேல் கூறியுள்ளார்.