வர்தா புயலுக்கு நிவாரணம் ரூ.500 கோடி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (19:59 IST)
வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


 

 
வக்கக்கடலில் தீவிரமாக நிலைக்கொண்டிருந்த வர்தா புயல் கடந்த 12ஆம் தேதி சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகள் முழுவதும் மின்சாரம் விநியோகிக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 
வர்தா புயல் காரணமாக வீசிய சுறைக்காற்றால் சென்னை சாலைகளில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 
 
வர்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு என ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.350 கோடியும், சென்னை மாந்கராட்சிக்கு ரூ.75 கோடியும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25 கோடியும், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 
அடுத்த கட்டுரையில்