ஓ.என்.வி விருதினை கலைஞருக்குக் காணிக்கையாக்கிய வைரமுத்து!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:15 IST)
கவிஞர் வைரமுத்து தனக்கு வழங்கப்பட்ட ஓ.என்.வி இலக்கிய விருதினை கலைஞருக்குக் காணிக்கையாக்கியதாக அறிவிப்பு. 

 
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற வைரமுத்து இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், கோபாலபுரத்தில் ஓ.என்.வி இலக்கிய விருதினைக் கலைஞருக்குக் காணிக்கை செய்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வாழ்த்தி மகிழ்வித்தார். அவரது குரலும் அன்பும் இன்னும் அந்த இல்லத்தில் கலைஞர் வாழ்வதாகவே பிரமையூட்டின. தந்தை போல் தமிழ் மதிக்கும் தனயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்