கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் – புறக்கணித்த வைகோ!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (13:40 IST)

சேலத்தில் நடைபெறும் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28 ஆம் தேதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் சேலத்தில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொள்ள மாட்டார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கணேசமூர்த்தி கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமான அறிவிப்பு:-

மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்