தேசத்துரோக வழக்கில் வைகோ கைது ; 15 நாள் நீதிமன்ற காவல்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (13:11 IST)
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
2009ம் ஆண்டுல் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு பல வருடங்களாக கிடப்பில் இருந்தது.
 
இந்நிலையில், வைகோ இன்று நீதிமன்றத்தில் தானாக சரணைடந்து வழக்கை சந்தித்தார். எனவே, அவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்ட்டார். 
 
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
அடுத்த கட்டுரையில்