வடலூரில் தைப்பூசம்.. ஜோதி தரிசனம் காண குவிந்த பக்தர்கள்..!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (07:49 IST)
இன்று தைப்பூச திருவிழா விசேஷமாக கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து பக்தர்கள் முருகன் கோவிலில் குவிந்து வருகின்றனர். 
 
குறிப்பாக வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலில் தைப்பூசம் தினத்தை முன்னிட்டு ஜோதி தரிசனத்தை காண உலகின் பல பகுதிகளில் இருந்து நேரில் மக்கள் வருகை தந்துள்ளனர்.
 
ஏழு திரைகள் அகற்றப்பட்டு ஜோதி தரிசனம் காணப்பட்டதை அடுத்து அதை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திர சென்று வடலூரில் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அதேபோல் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி முருகனின் அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்