மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி!!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (12:07 IST)
மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

 
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. தற்போது 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
 
அதன்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். 15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
 
கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்திக்கொள்ளலாம் என்பதால், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்