மாணவர்களே! விழிப்புணர்வுடன் இருங்கள் ! இந்தியாவில் மொத்தம் 279 டுபாக்கூர் கல்வி நிறுவனங்களாம்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (07:34 IST)
தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்தவுடன் மாணவ, மாணவியர்களின் கனவு கல்லூரிதான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே கல்லூரி கனவில் இருக்கும் மாணவர்கள் நல்ல கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். ஏனெனில் டுபாக்கூர் கல்லூரியில் தப்பித்தவறி சேர்ந்துவிட்டால் உங்கள் எதிர்காலமே வீணாகிவிடும் அபாயம் உள்ளது.



 


பல்கலைக்கழக மானியக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியாவில் 23 பல்கலைக்கழகங்களும், 279 தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசு அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் என்று அறிவித்துள்ளது. இவ்வாறு அங்கீகாரம் இல்லாத கல்லூரியை மாணவர்கள் அப்புறப்படுத்த வேண்டும் அரசு அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை இஞ்சினியரிங் கல்லூரிகள் என்பது கொடுமையிலும் கொடுமை. இந்த போலி கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்கள்  விழிப்புடன் இருக்குமாறும் பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்துள்ளது.

மாணவர்கள் போலி கல்வி நிறுவனங்கள் பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டுமா? உடனே இணையம் சென்று  www.ugc.ac.in மற்றும் www.aicte-india.org பாருங்கள். அதில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் இருக்கின்றது. எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கல்லூரிகளை கவனத்துடன் தேர்வு செய்ய மாணவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிக்கொள்கிறோம்
அடுத்த கட்டுரையில்