ஊரக வளர்ச்சித்துறையில் மெகா ஊழல் - உதயநிதி டிவிட்!!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (11:33 IST)
ஊரக வளர்ச்சித்துறையில் மெகா ஊழல் என நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 
அதில், மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு LED பல்ப் வாங்க ரூ.21,666 செலவு என்பது முதல் ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் பணியிட மாற்றத்துக்கு பல கோடி லஞ்சம் என்பது வரை உள்ளாட்சித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.தேர்தல் நேரம், கடைசி கால கொள்ளையில் அடிமைகள் வேகம் காட்டுகின்றனர்.
 
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் - கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்