கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த மணவாடியை சார்ந்தவர் ராமு. இவரது மகள் புவனேஸ்வரி. கரூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார்.
இதே போன்று வெங்கமேடு வாட்டர் டேங்க் தெருவை சார்ந்தவர் அண்ணாதுரை என்கின்ற செந்தில் என்பவரின் மகள் பிருந்தா. இவர் கரூரீல் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று காலையில் வீட்டை விட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை எனக் கூறி இரண்டு வீட்டு இளம்பெண்களின் பெற்றோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, இரண்டு பேரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டுக்குப் பிறகு புவனேஸ்ரி கல்லுரிக்கு சென்று விட, பிருந்தாவை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். ஆனால் அவர்களின் நட்பு தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள் வீடு திரும்ப வில்லை. இரண்டு வீட்டாரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இன்று புவனேஸ்வரியின் தந்தை ராமு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.