நொறுங்கி விழுந்த அடுக்குமாடி கட்டிடம் - டிடிவி ஷாக்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (13:04 IST)
சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஓர் அடுக்குமாடி கட்டிடம் நொறுங்கி விழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி டிவிட். 

 
சென்னையில் திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் டி ப்ளாக் கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 23 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் இன்று காலை விரிசல் விழ தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்த குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
இந்நிலையில் டி ப்ளாக் கட்டிடம் மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதாவது, சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஓர் அடுக்குமாடி கட்டிடம் திடீரென நொறுங்கி விழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
 
அங்கு குடியிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. இடிந்து விழுந்த அடிக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களை தமிழக அரசு வழங்குவதுடன் அதே வளாகத்திலுள்ள எஞ்சிய அடுக்குமாடி குடியிருப்புகளின் நிலைத்தன்மையையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
 
இதுமட்டுமின்றி, 20 ஆண்டுகளைத் தாண்டிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, அவை மக்கள் வசிக்க ஏற்றவையா? என உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்