தகுதி நீக்க வழக்கு ; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : தினகரன் அதிரடி திட்டம்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (11:25 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.   
 
இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
 
3வது நீதிபதி அமர்த்தப்பட்டு, இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு எப்படியும் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் எனத்தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள தினகரன் தரப்பு அடுத்து என்ன செய்வது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில், இந்த வழக்கு எவ்வளவு தாமதம் ஆனாலும், அதுவரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அவகாசம் கிடைக்கும் என்பதால் இதை விரைவில் முடிக்க தினகரன் தரப்பு தயாராகி வருகிறது.
 
ஏற்கனவே 10 மாதங்களாக எங்கள் தொகுதி எம்.எல்.ஏ இல்லாமல் காலியாக இருக்கிறது. மக்கள் பணி செய்ய முடியவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் உச்ச நீதிமன்றதில் மனு அளிக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்