பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (12:13 IST)
பெருங்களத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


 

 
பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டுள்ளனர்.
 
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு 6,832 சிறப்புப் பேருந்துகள் இயக்கியது. இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் மீண்டும்  சென்னை திரும்பிக் கொண்டிருப்பதால் சென்னையின் பெருங்களத்தூர்  உள்ளிட்ட பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் ஏரளாமான வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன.
 
இது குறித்து பணனி ஒருவர் கூறுகையில், ஜீஎஸ்டி சாலையில் செங்கல்பட்டிற்கு முன்பாக இந்தே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதாகவும், சிங்கபெருமாள் கோவிலில் இருந்தே பேருந்து நகர்ந்து நகர்ந்து வருவதாகவும் கூறினார்.
 
மேலும், வண்டலூரில் இந்து பெருங்களத்தூர் வருவதற்கே சுமார் 1 மணிநேரம் ஆனதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
இதேபோல, வேலூல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வந்தவர்கள் பூந்தமல்லி மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர்.