தாய்லாந்தில் நாட்டின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுலா நகரான ஆயுத்தயா நகரில் ஓடும் சாயோ ப்ரயா ஆற்றில் படகு சவாரி செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த படகின் அருகில் மற்றொரு படகு சென்று கொண்டிருந்தபோது, அந்த படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகோட்டி படகை திருப்பினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில், 33 பேர் காயம் அடைந்துள்ளனர்.