நாளை லாரிகள் ஸ்ட்ரைக்! – இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் இயங்காது

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (14:52 IST)
புதிய மோட்டார் வாகன சட்ட அபராத விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சுங்க சாவடிகளிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெருமளவில் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் பெட்ரோல் விலை போன்றவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருதல், சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தேசிய அளவில் 45 லட்சம் லாரிகளும், தமிழக அளவில் 5 லட்சம் லாரிகளும் இயங்காது என கூறப்படுகிறது. லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் காய்கறி சந்தைகள், அங்காடிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவர் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்