மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! – இன்றைய விலை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (09:36 IST)
நேற்று சென்னையில் தக்காளி விலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்வை சந்தித்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலையும் குறைய தொடங்கியது.

நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ தக்காளி ரூ.50 முதல் 60க்குள் விற்பனையாகி வருகிறது. எனினும் அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்