பிறந்த நாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடிய விஜயகாந்த்!
நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து இன்று காலையிலேயே அவர் தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை எடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி மூலமும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தலைவர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் டுட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். முதல்வர் பழனிசாமி, ‘திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் துணை முதல்வர் தனது டுவிட்டரில் கூறியதாவது: பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.