எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை வடிவமைக்க ....ஒன்றுகூடிய இஸ்லாமிய சொந்தங்கள்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (17:26 IST)
விருதுநகரில் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை வடிவமைக்க கடல்கடந்து கிராமத்தில் ஒன்றுகூடிய  இரண்டாயிரம் இஸ்லாமிய சொந்தங்கள்!
 
இன்றைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் சொந்த பந்தங்கள், அன்பு பாசங்கள், மலிந்துவரும் சூழ்நிலையில் விருதுநகர் அருகே A.புதுப்பட்டி கிராமத்தில் வசித்த இஸ்லாமியர்களில் பலர் துபாய்,சவுதி,மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளிநகரங்களிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த ஊரில் ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் தமது அன்பை பரிமாறி, ஒன்றாக உணவருந்தி தமது சொந்தத்தை புதுப்பித்துக் கொண்டனர்.
 
 கிட்டத்தட்ட ஒரு திருவிழாவைப்போல் நடைபெறும் இந்நிகழ்வில் பெண் பார்க்கும் படலம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்வரை இங்கு கிடைப்பதாகவும், எல்லாவற்றையும் விட எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை வடிவமைக்க தங்களில் மூத்தோர் வழிகாட்டுதலை சிரமேற்கொண்டு அனைவரின் வாழ்வும் வளம்பெறவும், நல்ல பண்பாட்டை பிள்ளைகளுக்கு கற்றுத்தரவும் ஆண்டுக்கு ஒருமுறை எங்கிருந்தாலும்  இங்கு ஒன்று கூடுவதாக தெரிவிக்கிறார் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கஸாலி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்