மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

வியாழன், 11 மே 2023 (08:01 IST)
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த அறிவிப்பை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களது அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினார். 
 
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு காரணமாக தமிழக அரசின் மின்வாரியத்துறைக்கு ஆண்டுக்கு அருவாய் 527 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
மின்வாரிய ஊழியர்களுக்கான ஆறு சதவீத ஊதிய உயர்வை அனைத்து தொழிற்சங்கர்களும் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் தமிழக அரசுக்கும் மின்வாரியத்துறை அமைச்சருக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்