பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்க கூடாது: மின்வாரியம் உத்தரவு..!

வெள்ளி, 5 மே 2023 (10:56 IST)
2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்க கூடாது எனவும், புதிய இணைப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது!
 
பயன்பாட்டில் இல்லாத இணைப்பை பயனாளர் புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும். மேலும் அவரிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் என மின்வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது!
 
மேற்கண்ட உத்தரவை அனைத்து பொறியாளர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு,  2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை நேரடியாக உறுதி செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் இது குறித்த அறிக்கையை வாரந்தோறும் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்