மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருங்காலத்தில் உற்பத்தி துறையை அரசு வைத்துக் கொண்டு, விநியோகம் செய்யும் துறையை தனியாருக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காகத்தான் இரண்டாவது பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.